கூட்டணிக்கு தே.மு.தி.க வருமா?‍- `ஆச்சர்யங்கள் நடக்கலாம்' என்கிறார் பியூஷ் கோயல் | piyush goyal talks about dmdk

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:28 (16/03/2019)

கூட்டணிக்கு தே.மு.தி.க வருமா?‍- `ஆச்சர்யங்கள் நடக்கலாம்' என்கிறார் பியூஷ் கோயல்

தே.மு.தி.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்று அறிவிக்கிறது. இதற்காகத் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் அ.தி.மு.க தான் அவர்களுக்கான வாய்ப்பாக உள்ளது. இதனால் அ.தி.மு.கவுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வண்டலூர் அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று மதியம் அவர் சென்னை வரவுள்ளார். அவரின் வருகைக்கு முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். 

விஜயகாந்த்

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், ``இன்று பிற்பகல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதை கேட்கத் தமிழக மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். மோடி மற்றும் எடப்பாடி தலைமையில் சிறந்த, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்குக் கொடுக்க இருக்கிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் எங்கள் கூட்டணி வெல்லும். மக்களுக்கு ஒரு நல்ல நிலையான அரசை அமைப்பதற்கு எங்கள் கூட்டணித் தலைவர்கள் உழைத்து வருகிறார்கள்" என்றார். 

பியூஷ் கோயல்

அவரிடம் தே.மு.தி.க கூட்டணியில் இணையுமா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ``எப்போதும் சில ஆச்சர்யங்கள் நடக்கும். தற்போதும் ஆச்சர்யங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் தற்போது பிரசாரத்துக்குத் தயாராகி வருகிறோம். நிறைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை கொண்ட மோடி தலைமையை யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close