வருமான வரித்துறை வழக்கில் அழகிரி மகளுக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரன்ட்! | Non bailable warrant issued against azhagiri's daughter anjuga selvi azhagiri

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (06/03/2019)

கடைசி தொடர்பு:16:35 (06/03/2019)

வருமான வரித்துறை வழக்கில் அழகிரி மகளுக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரன்ட்!

றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி மீது வருமான வரி ரிட்டன்ஸை முறையாக தாக்கல் செய்யாத வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அழகிரி மகள்

வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, அழகிரியின் மகள் மீது வருமான வரித் துறை சார்பில் 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி, 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சுகச் செல்வி அழகிரி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டபோது, அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர் ஒரு அமெரிக்க பிரஜை எனவும் சொல்லப்பட்டது. தேர்தல் சமயம் தி.மு.க கூட்டணிக்கு எதிராக அழகிரி செயல்படுவார் என எதிர்பார்த்திருந்த மத்திய அரசு, அவர் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் போகவே, அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இத்தகைய வழியில் முயல்வதாக அரசியல் வட்டத்தில் முணுமுணுக்கப்படுகிறது. 


[X] Close

[X] Close