`தப்புக்கணக்கு போட வேண்டாம்! - விமர்சனத்துக்கு டி.டி.வி.தினகரன் பதில் | TTV Dinakaran speaks about parliament elections

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:36 (16/03/2019)

`தப்புக்கணக்கு போட வேண்டாம்! - விமர்சனத்துக்கு டி.டி.வி.தினகரன் பதில்

``எப்போதும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கணக்குதான். பழைய வாக்கு கணக்குகள் எடுபடாது. அதனால் தப்புக்கணக்கு போட வேண்டாம்’’ என்று விமர்சனத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

டிடிவி தினகரன்

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அந்தச் சின்னத்தைக் கேட்பதில் தவறில்லை. நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். மக்களும் தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர். அதனால் நாங்கள் அம்மாவுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை. எப்போதும் ஒவ்வொரு தேர்தலில் புதிய கணக்குதான் பழைய வாக்கு கணக்குகள் எடுபடாது. அதனால் தப்புக்கணக்குப் போட வேண்டாம். எங்களுடன் கூட்டணிக்கு இணைபவர்களை 2 போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 38 தொகுதியிலாவது வெல்வோம்.

ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணியாமல் எதிர்த்து தியாக வாழ்க்கை வாழ்ந்துவரும் கழகத்தினருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வடிகட்டிய சந்தர்பவாதம். ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியவர்களுடன் கூட்டணி வைத்த ஈ.பி.எஸ் அணியினர் ஜெயலலிதா படத்தை வைக்கக்கூடாது. மோடி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் போல ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் செயல்படுகிறார்கள். ஓ.பி.எஸ் விரைவில் பா.ஜ.க-வோடு இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க-வுடன்கூட கூட்டணி வைக்கத் தயங்கமாட்டார்கள். கொள்கையில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க கூட்டணி மானங்கெட்ட கூட்டணி, கொள்கையில் நாணல்போல வளைந்து கூட்டணி அமைக்கிறார்கள். தொண்டர்களை நம்பிதான் கழகம் செயல்படுகிறது. சிறிய கட்சிகளோடு கூட்டணி பேசிவருகிறோம். அ.ம.மு.க-வுக்கு நிச்யம் வெற்றி உண்டு’’ என உறுதியளித்தார்.


[X] Close

[X] Close