`பேரறிவாளனுக்கு எதிராக ஆதாரம் இருந்ததா?'- புதிய வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள் | arputhammal shares video about perarivalan

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/03/2019)

கடைசி தொடர்பு:16:45 (06/03/2019)

`பேரறிவாளனுக்கு எதிராக ஆதாரம் இருந்ததா?'- புதிய வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்

`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து ஆறு மாதம் முடியப்போகிறது. ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவை முடிவு, அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையும் கண்டுகொள்ளாமல் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை செய்யப்படலாம். ஆனால், ஆளுநர் கையொப்பமிடாமல் இருப்பதால் விடுதலை தாமதமாகி வருகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை. 

அற்புதம்மாள்

7 பேரின் விடுதலைக்காகப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையொப்பமிட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். வரும் மார்ச் 9-ம் தேதி விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, இன்று பேரறிவாளன் வழக்கை விசாரித்து வந்த எஸ்பி தியாகராஜன் வழக்கு குறித்து பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள். 

எஸ்பி தியாகராஜன்

எந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனைக் குற்றவாளி எனச் சட்டம் சொன்னதோ அதைப் பதிவு செய்த அதிகாரியோட குரல் இது. இதற்குப் பிறகும் ஒரு நிரபராதியின் வாழ்வை அழித்து, ரத்தத்தைக் குடித்து என்னத்த சாதிக்கப்போறீங்க? எனக் கூறி அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ``பேரறிவாளன் எந்தக் கொலையையும் செய்ததாகவோ அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவோ எந்த ஆதாரங்களும் கிடையாது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் மீது கொண்ட இரக்கத்தினாலும் தமிழ் மீது கொண்ட பற்றிலும் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர்தான் பேரறிவாளன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close