அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பிரசார மேடையிலிருந்து விஜயகாந்த் - ஜி.கே.வாசன் படங்கள் திடீர் அகற்றம்! | Vijayakanth and GK Vasan photos removed from ADMK - BJP meeting flex board

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:38 (16/03/2019)

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பிரசார மேடையிலிருந்து விஜயகாந்த் - ஜி.கே.வாசன் படங்கள் திடீர் அகற்றம்!

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பிரசார மேடையிலிருந்து விஜயகாந்த் - ஜி.கே.வாசன் படங்கள் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், தற்போது திடீரென அவை அகற்றப்பட்டிருக்கின்றன. 

விஜயகாந்த் படம் அகற்றம்

அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் பிரசாரப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அதேபோல், அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

விஜயகாந்த் படம் அகற்றம்


தே.மு.தி.க மற்றும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், மேடையில் மற்ற கட்சித் தலைவர்களின் படங்களுடன் இவர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதற்கேற்ப, கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலையிலேயே சென்னை வந்த தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் பியூஷ் கோயல், தே.மு.தி.க செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட தே.மு.தி.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

இந்தநிலையில், கிளாம்பாக்கம் கூட்ட மேடையில் இருந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் படங்கள் தற்போது திடீரென அகற்றப்பட்டிருக்கின்றன.   
 


[X] Close

[X] Close