நீலகிரி (தனி) தாெகுதி யாருக்கு? - போட்டிபோட்டு மக்களைச் சந்திக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க. | ADMK, BJP cadres shows keen interest to contest in Nilgris constituency

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:38 (16/03/2019)

நீலகிரி (தனி) தாெகுதி யாருக்கு? - போட்டிபோட்டு மக்களைச் சந்திக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க.

முதல் முறையாக நீலகிரி (தனி) தாெகுதியாக அறிவிக்கப்பட்ட 2009-ம் ஆண்டு, தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தாெகுதியில் மீண்டும் பாேட்டியிட்ட ஆ.ராசாவை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சி.கோபாலகிருஷ்ணன், பா.ஜ.க சார்பில் எஸ்.குருமூர்த்தி ஆகியாேர் பாேட்டியிட்டனர். ஆ.ராசாவை தோல்வியடைய வைக்க வேண்டும் என்பதற்காக, ஓட்டுகள் பிரிவதைத் தவிர்க்க, பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட எஸ்.குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட, தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சி. காேபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட எஸ்.குருமூர்த்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக எஸ்.குருமூர்த்தி இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி ( தனி) தாெகுதியில் போட்டியிட தி.மு.க சார்பில் ஆ.ராசா விருப்பமனு அளித்துள்ளார். ஏறக்குறைய தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், எதிர்த் தரப்பில் கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க கட்சியினரிடையே யாருக்கு நீலகிரி (தனி) தாெகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. அ.தி.மு.க  சார்பில் தற்பாேதைய எம்.பி, சி.காேபாலகிருஷ்ணன்,  சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லாேகநாதன், கடந்த முறை பா.ஜ.க சார்பில் பாேட்டியிட முயன்று வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு, தற்போது அ.தி.மு.க-வில் உள்ள எஸ்.குருமூர்த்தி உட்பட 27பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். 

அ.தி.மு.க  சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பாேட்டியிட விருப்ப மனு அளித்துள்ள எஸ்.குருமூர்த்தி கூறுகையில், ‛‛1996-ம் ஆண்டு, பள்ளிப் பருவத்திலேயே பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பில் இணைந்து,  1998-ம் ஆண்டு பா.ஜ.க இளைஞர் அணி குன்னூர் நகரத் தலைவராகப் பொறுப்பேற்று, முழுநேர அரசியலில் ஈடுபட்டுவருகிறேன். தாெடர்ந்து 2002-ம் ஆண்டு இளைஞரணி மாவட்டத் தலைவர் பதவியில் 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக, இளைஞரணி மாநில தலைவராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. நீலகிரி (தனி) தாெகுதியாக அறிவிக்கப்பட்ட 2009-ம் ஆண்டு, தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட,  பா.ஜ.க சார்பில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க சார்பில் சி.கிருஷ்ணன்.  அப்பாேது, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை நீலகிரி மாவட்ட பட்டிதாெட்டியெங்கும் பரப்பி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். தேர்தலில் ஆ.ராசா வெற்றி பெற்றார். எனக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு தேசிய பாெதுக்குழு உறுப்பினராகப் பதவி வழங்கப்பட்டது. அப்பாேது நடந்த குன்னுார் நகர் மன்றத் தேர்தலிலும், போட்டியிட்டுள்ளேன். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் ஆ.ராசாவை எதிர்த்து பா.ஜ.க., சார்பில் வேட்டுமனு தாக்கல்செய்தேன். அந்தத் தேர்தலில் பாஜக முருகன்ஆ.ராசாவைத் தோற்கடிக்க, ஓட்டுகள் பிரிவதைத் தவிர்க்க, மேலிட உத்தரவின்படி எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சி.கோபாலகிருஷ்ணன், 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேர்தலுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஏற்பட்ட ஈர்ப்பால், அவரது முன்னிலையில் , போயஸ் தாேட்ட இல்லத்தில் அ.தி.மு.க-வில் இணைந்தேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், ஏற்கெனவே 2 முறை  தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்துப் போட்டியிட்டுள்ள அனுபவம் உள்ளதாலும், தாெகுதிகுறித்த அனுபவம் அதிகம் உள்ளதாலும், உரிய உத்தி வகுத்து, அ.தி.மு.க வெற்றிபெறப் போராடுவேன்.  இதே நிலையில், பா.ஜ.க-வுக்கு நீலகிரி (தனி) தாெகுதி ஒதுக்கப்பட்டால், கூட்டணிக் கட்சி என்பதால் அந்தக் கட்சியின் வெற்றிக்காகப் பணியாற்றுவேன்'' என்றார். 

இதற்கிடையே, பா.ஜ.க சார்பில் நீலகிரி (தனி) தாெகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியினரால் கூறப்படும் தேசிய தாழ்த்தப்பட்டாேர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன், கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்காெண்டு, பாெதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, நடவடிக்கை எடுத்துவருகிறார். நீலகிரி மாவட்டத்தில் அதிகம் வசிக்கும் படுகர் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அந்த மக்களிடம் உறுதியளித்து வாக்கு சேகரிப்பார் எனத் தெரிகிறது. மேலும், இவர் நீலகிரி (தனி) தாெகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால், இவரை நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்காெள்ளுமாறு கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


[X] Close

[X] Close