`சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள்?’ - அலசும் காம்ரேடுகள் | Which constituencies are for DMK alliences ?

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:41 (16/03/2019)

`சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள்?’ - அலசும் காம்ரேடுகள்

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடுகுறித்த பேச்சுவார்த்தை கடந்த முன்று நாள்களாக நடைபெற்றுவந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும்,  ம.தி.மு.க-வுக்கு மக்களவை, மாநிலங்களவையில் தலா ஒரு தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகளும்,  இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இப்படி எண்ணிக்கை அளவிலான பேச்சுவார்த்தை முடிவாகிவிட்ட நிலையில், எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை. அதுகுறித்த பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதியும் முடிவாகும் என்று அந்தக் கட்சியில் உள்ள பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அதேபோன்று, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகள் தரப்பில் விசாரித்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் இருந்து மதுரை, கோவை தொகுதிகளைக் கேட்டுள்ளனர். அதில், கோவையைத் தரவில்லை என்றால், மதுரை, கன்னியாகுமரி தொகுதிகள் முடிவாகும் எனக் கூறுகின்றனர். அதேபோன்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாகை, தென்காசி, கோவை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இரண்டை ஒதுக்குமாறு கூறியுள்ளனர். அதில் திருப்பூர், நாகை முடிவாகும் என சி.பி.எம் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. 

 


[X] Close

[X] Close