ராமலிங்கம் படத்திறப்பில் வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேச்சு! - பா.ம.க முன்னாள் பிரமுகர் மீது வழக்கு | Police files 2 cases against PMK former functionary

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (06/03/2019)

ராமலிங்கம் படத்திறப்பில் வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேச்சு! - பா.ம.க முன்னாள் பிரமுகர் மீது வழக்கு

திருபுவனம் ராமலிங்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக பா.ம.க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டம் ஒன்றில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி மற்றொரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 வழக்குகள் பதிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த மாதம் 5ம் தேதி மதபிரசாரத்தில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்டதற்காக பா.ம.க பிரமுகரான ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இந்தநிலையில் ராமலிங்கத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி திருபுவனத்தில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.
இதில், அவரின் உறவினர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பா.ம.க மாநில முன்னாள் துணைத் தலைவரான ம.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராமலிங்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் ம.க.ஸ்டாலின்

இதில், பேசிய ம.க.ஸ்டாலின்,``கொலைக் குற்றவாளிகளை காவல்துறையும், நீதிமன்றமும் முறையாகத் தண்டிக்கவில்லை என்றால் குற்றவாளிகளின் கை,கால்களை நாங்களே வெட்டி விடுவோம்’’ எனக் கடிமையாகப் பேசினார். இதையடுத்து, அவர் மீது வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக் கோரி ம.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி கும்பகோணம் கிழக்கு போலீஸாரும் இன்று அவர்  மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close