``தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் எத்தனை?” - பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு | High Court ask details in tasmac issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (07/03/2019)

கடைசி தொடர்பு:07:31 (07/03/2019)

``தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் எத்தனை?” - பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதன் உற்பத்தி அளவு, அதன் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக விளங்கும் டாஸ்மாக் மதுக் கடைகள் முழுமையாக மூடப்படாத நிலையில் உள்ளது. டாஸ்மாக் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்படைந்துவருகிறது.  ஆனால், அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்காற்றுவதால் அதை முழுமையாக மூடாமல் அரசு மெத்தனம் காட்டிவருகிறது.

இந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ``டாஸ்மாக் கடையைக் குறைத்து, முழுமையாக மூடிவிடுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை அதை நடைமுறைப் படுத்தவில்லை. எனவே, தேர்தல் அறிவிக்கையின்படி, 2020-க்குள் டாஸ்மாக் கடைகளை  முழுமையாக மூட உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, `தமிழகத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள்  தமிழகத்தில் எத்தனை உள்ளது. அதன் மூலம் தயாரிக்கப்படும் மதுபானத்தின் அளவுகள் என்ன, டாஸ்மாக்குக்கு எவ்வளவு விநியோகம் செய்யப்படுகிறது' என்பது குறித்து தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


[X] Close

[X] Close