`என்னது, டாஸ்மாக் கடை கட்டுறாங்களா?'- ஆக்ரோஷத்துடன் வந்த மாணவர்களைப் பார்த்து தெறித்து ஓடிய ஊழியர்கள் | tasmac staffs runs after seeing school students coming against

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:09 (07/03/2019)

`என்னது, டாஸ்மாக் கடை கட்டுறாங்களா?'- ஆக்ரோஷத்துடன் வந்த மாணவர்களைப் பார்த்து தெறித்து ஓடிய ஊழியர்கள்

tasmac

`என்னது, டாஸ்மாக் கடை கட்டுறாங்களா?'- ஆக்ரோஷத்துடன் வந்த மாணவர்களைப் பார்த்து தெறித்து ஓடிய ஊழியர்கள்

சீர்காழி அருகே கோதண்டபுரத்தில் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கட்டடம் கட்ட பள்ளி மாணவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

டாஸ்மாக் மதுபானத்தை கொட்டும் மாணவர்கள்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கோதண்டபுரத்தில் மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலும், கால்நடை மருத்துவமனைக்கு எதிர்புறத்திலும் உள்ள இடத்தில் இன்று  டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் வேலையாட்கள் என 10-க்கும் மேற்பட்டோர் ஒரு பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நிலத்தை சமன் செய்து புதியதாக டாஸ்மாக் கடை கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கினர். தகவலறிந்த பள்ளி மாணவர்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு டாஸ்மாக் கடை கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துக்  கண்டன கோஷம் எழுப்பினர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

கடை கட்டும் பணியை ஊழியர்களும் பணியாட்களும் தொடங்க முற்பட்டபோது, வணிகர் சங்கத்தினர் கோதண்டபுரத்தில் உள்ள 40 வியாபாரக் கடைகளை அடைத்தனர். பின்னர் பள்ளி மாணவர்கள் பாட்டில்களில் உள்ள மதுவை கீழே கொட்டி கண்டனத்தை  தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் டாஸ்மாக் கடை கட்டும் இடத்துக்கு ஆக்ரோஷமாக வந்தனர். இதைக் கண்ட டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். பின்னர் அங்கிருந்த சிமென்ட் மூட்டைகள் மற்றும் கருங்கல் ஜல்லிகளை அகற்றினர். தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 'இங்கு டாஸ்மாக்  கடை வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம்  கைவிடப்பட்டது.

படம்: பா.பிரசன்னா


[X] Close

[X] Close