வறட்சியில் பூக்கும் `பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!- நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி | Flame of the Forest flower in ooty

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:12:30 (07/03/2019)

வறட்சியில் பூக்கும் `பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!- நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சியை தாங்கி வளரும் பிளேம் ஆஃப் தி பாரஸ்ட் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவருகிறது.

பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள்

நீலகிரியில் உறைபனிகொட்டி வரும் நிலையில் அனைத்து வனங்களும் காய்ந்து போயுள்ளன. மழை மறைவுப் பகுதியான முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மசினகுடி முதல் முதுமலைப் புலிகள் காப்பகம் வரை பல  ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் காய்ந்து போய் காட்சியளிக்கின்றன. இதனால், பசுந்தீவனங்கள் கிடைக்காமல், இங்குள்ள வனவிலங்குகள் தற்போது இடம் பெயரத்துவங்கியுள்ளன. குறிப்பாக, யானை, மான், காட்டுமாடு போன்ற விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயருகின்றன.

நீலகிரியில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள்

வறண்டு காணப்படும் இந்த முதுமலைக் காட்டில் தற்போது விருந்தாக உள்ளது பிளேம் ஆஃப் தி பாரஸ்ட் [Butea monosperma]  மலர்களே. இந்த மலர்கள் தெற்கு ஆசியாவில் விரவி காணப்படக்கூடியதாகும். பொதுவாக வறண்ட காலங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட இந்த மலர்கள் அடர் சிவப்பு மற்றும் வெளிர் சிவப்பு நிறத்திலும் பூக்கும். இந்தவகை பூக்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் முதுமலைக் காடுகளில் வறண்டு காணப்படும் மரங்களுக்கு நடுவே, சிவப்பு நிறத்தில் மரம் முழுக்க பூத்துள்ளது. இந்த மலர்களைத் தேடி தேனீக்களும், வண்டுகளும் தேன் சிட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன. மசினகுடியில் தொடங்கி முதுமலை, பந்திப்பூர் மற்றும் மைசூர் சாலையில் நஞ்சன் கூடு வரையில் உள்ள வனங்களில் இந்த மலர்கள் அங்காங்கே பூத்துள்ளது. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்து செல்வதுமட்டுமின்றி, புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.


[X] Close

[X] Close