` சிபாரிசு செய்பவர்களை அழைத்து வரக் கூடாது!' - வேட்பாளர் நேர்காணலுக்கு கண்டிஷன் போட்ட ஸ்டாலின் | Stalin will meet DMK candidates in anna arivalayam

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:46 (16/03/2019)

` சிபாரிசு செய்பவர்களை அழைத்து வரக் கூடாது!' - வேட்பாளர் நேர்காணலுக்கு கண்டிஷன் போட்ட ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அவர்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் முன்னதாக தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியானது, பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்பு, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மரணம், பேருந்தின் மீது கல் வீசிய வழக்கில் ஓசூர் எம்.எல்.ஏவும் விளையாட்டுத்துறை அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகியவற்றால் தற்போது தமிழகத்தில் மொத்தமாக 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. 

ஸ்டாலின்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலி தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன. தி.மு.க-வைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

ஸ்டாலின்

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்ப மனு கொடுத்தவர்களிடம் ஸ்டாலின் நேர்காணல் செய்யவுள்ளார். இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், `வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களைத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரும் 9-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நேர்காணல் மூலம் தொகுதி நிலவர வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளார். இந்த நேர்காணலின் போது அந்தந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களை நேர்காணலுக்கு அனுமதிக்க முடியாது’ என தி.மு.க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close