ஆக்கிரமிப்பாளர்கள், வாடகைதாரர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கும் அடுக்குமாடி வீடுகள்! | Tamil Nadu Slum Clearance Board's new project started in Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (07/03/2019)

ஆக்கிரமிப்பாளர்கள், வாடகைதாரர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கும் அடுக்குமாடி வீடுகள்!

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 49.53 கோடி மதிப்பிலான 576 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

                                                       

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அரியலூர் நகராட்சி மூலம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, அரியலூர் நகராட்சிக்கு 2512 நபர்களுக்கு குடியிருப்புகள் தேவை என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு தாரர்கள், கோயில் எல்லையில் வசிப்போர், வாடகை வீட்டில் வசிப்போருக்கும், ஏரி மற்றும் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மற்றும் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்காக, சுமார் 576 குடியிருப்புகள் தரைதளத்துடன், மூன்றுமாடி அடுக்கு குடியிருப்புகள் ரூ.49.53 கோடி மதிப்பீட்டில், பார்ப்பனஞ்சேரி பகுதியில் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதையடுத்து, இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணியை தமிழக அரசு தலைமைக் கொறடா, தாமரை.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கிவைத்தனர். 

                                                    

 5 ஏக்கர் பரப்பளவில், அடுக்குமாடி கட்டடங்கள் கொண்ட வீடுகளில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறையுடன் மின்வசதி, தண்ணீர் வசதியுடன் சுமார் 400 சதுர அடியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் குடியிருப்புகள் கட்டித்தரப்பட உள்ளது.

                                                         

இக்குடியிருப்புகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகள், ரூ.50,000 பயனாளிகளின் பங்காகச் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை, மத்திய மாநில அரசுகளின் மானியமாகச் செலுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close