போலி ஆவணங்கள் மூலம் டெண்டர் ஒதுக்கீடு! - இராசாசி மருத்துவமனை கட்டுமானத்தில் ஊழல் | DVAC files case against Madurai pwd officials over corruption

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (07/03/2019)

கடைசி தொடர்பு:16:21 (07/03/2019)

போலி ஆவணங்கள் மூலம் டெண்டர் ஒதுக்கீடு! - இராசாசி மருத்துவமனை கட்டுமானத்தில் ஊழல்

அரசு இராசாசி மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியில் ஊழல் நடப்பதாக, ஒப்பந்தக்காரர் கொடுத்த புகாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராசாசி அரசு மருத்துவமனை

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். பல இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைத்தாலும், அதி நவீன கருவிகள் இங்குதான் உள்ளதென்று பொதுமக்களுக்கு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், போதுமான கட்டடங்கள் இல்லாத சூழல் இருந்துவருகிறது. இதனால், இராசாசி மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு ஏற்பாடுகள் செய்தது.

இந்நிலையில், 150 கோடி மதிப்பில் அதிநவீன சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை, கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதற்காக, சுமார் இரண்டு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் மருத்துவ நிர்வந்த் துறையினர் முறையாக டெண்டர் காட்டாமல், தங்களுக்கு வேண்டிய நபர்களுக்குப் போலியான ஆவணங்கள் உதவியுடன் டெண்டரை ஒதுக்கீடுசெய்து, சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக ஒப்பந்தக்காரர் நிர்மல் குமார், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியேவந்தன.

ராசாசி அரசு மருத்துவமனையில் நடந்த ஊழல்

அதைத் தொடர்ந்து, முறைகேடாக பொதுப்பணித்துறையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மதியழகன், காசி பாண்டியன், செல்வராஜ், மீனாள் ஆகிய நான்கு அதிகாரி மீதும் மோசடிக்கு உதவியதாக ஒப்பந்ததாரர்கள் அகமத் மற்றும் ராமா உட்பட 6 பேர்மீது அரசை ஏமாற்றி போலி ஆவணங்களைத் தயார்செய்து, மோசடிசெய்த குற்றத்துக்காக 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.


[X] Close

[X] Close