`அவரால்தான் நாங்கள் வாழ்கிறோம்!'- எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்கும் வி.ஏ.ஓ சங்கம் | VAO's association to set a MGR statue near karaikudi

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (07/03/2019)

`அவரால்தான் நாங்கள் வாழ்கிறோம்!'- எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்கும் வி.ஏ.ஓ சங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதி புதூரில், ஏழு சென்ட் பட்டா நிலத்தில் 9 அடி உயரமுள்ள எம்.ஜி.ஆர் சிலை அமைக்க வி.ஏ.ஓ சங்கத்தினர் திட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா  நடந்து முடிந்திருக்கிறது. அந்த விழாவிற்கு சிவகங்கைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமைதாங்கினார்.

இதுகுறித்து வி.ஏ.ஓ ஒருவர் பேசுகையில், "கிராம நிர்வாக அலுவலர் பதவியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அவரால் இன்றைக்கு நாங்கள் எல்லாம் வாழ்கிறோம். அவர் மறைந்தாலும் அவரை நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக, சிலை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தோம். இந்த முயற்சி திடீரென எடுக்கப்பட்டது அல்ல.1984-ம் ஆண்டிலிருந்து இடம் தேடினோம். இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறது.

 காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலை அமைக்க என்ன காரணம் என்று நீங்கள் கேட்கலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முதன் முதலில் தோன்றியதே காரைக்குடியில்தான். அதனால்தான், எம்.ஜி.ஆர் சிலையை காரைக்குடியில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.  இந்த வழியே போகிறவர்கள், எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவதோடு, உள்ளே வந்து அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்துவிட்டு, சற்று ஓய்வு எடுத்துச் செல்லும் விதமாக இந்த இடம் அமைக்கப்படுகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close