`திருமணமான சில தினங்களில் கணவனை இழந்த மகள்!’ - மனவேதனையில் ரயில் முன் பாய்ந்த தந்தை | Vellore man committed suicide over daughter lost her husband after few days of marriage

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (07/03/2019)

`திருமணமான சில தினங்களில் கணவனை இழந்த மகள்!’ - மனவேதனையில் ரயில் முன் பாய்ந்த தந்தை

திருப்பத்தூர் அருகே திருமணமான சில தினங்களில் மருமகன் இறந்து, மகள் விதவையானதால் மன வேதனையடைந்த தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட பெரியண்ணன்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சிமோட்டூரைச் சேர்ந்தவர் பெரியண்ணன். கூலித் தொழிலாளி. இவரின் மகள் சுமதிக்கு, ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அவரின் கணவர் 10 நாள்களுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மணக்கோலத்தில் புகுந்த வீட்டுக்குச் சென்ற மகள், விதவைக் கோலத்தில் பிறந்த வீட்டுக்கே திரும்பவந்ததால் பெரியண்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி நந்தனம் கலைக் கல்லூரி அருகில் சென்ற பெரியண்ணன், திடீரென ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். ரயில் மோதியதில், உடல் சிதறி உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம், பெரியண்ணன் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


[X] Close

[X] Close