வெளிநாடு, உள்நாட்டிலிருந்து வந்த 1.5 லட்சம் மலர் நாற்றுகள்!- கோடை சீசனுக்குத் தயாராகும் காட்டேரி பூங்கா | Planting for summer season ion

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:19 (08/03/2019)

வெளிநாடு, உள்நாட்டிலிருந்து வந்த 1.5 லட்சம் மலர் நாற்றுகள்!- கோடை சீசனுக்குத் தயாராகும் காட்டேரி பூங்கா

கோடை சீசனுக்கு ஒன்றரை லட்சம்  மலர் நாற்றுகள் காட்டேரி பூங்காவில் நடவுப் பணி தொடங்கியது.

காட்டேரி பூங்காவில் நடவு பணி

நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது காட்டேரி பூங்கா. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கம். எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் சீசனுக்காக  ஒன்றரை லட்சம் மலர்நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் ஆன்ட்ரினம், பெடுனியா,  பால்சம்  பெகோனியா, பேன்சி சால்வியா, ஆஸ்டர் போன்ற முப்பது வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பஞ்சாப், கொல்கத்தா, காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்து பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நடவுப் பணியை குன்னுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜ்கோபு  தொடங்கிவைத்தார். தற்போது நடப்படும் மலர் நாற்றுகள் மே மாதம் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.


[X] Close

[X] Close