அரசிகள் ஆளும் மலைகளின் அரசி! - எடுத்துக்காட்டாய் விளங்கும் நீலகிரி | Women in important postings at nilgiris district

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (08/03/2019)

அரசிகள் ஆளும் மலைகளின் அரசி! - எடுத்துக்காட்டாய் விளங்கும் நீலகிரி

நீலகிரி மாவட்டத்தின் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் என பல்வேறு முக்கிய பாெறுப்புகளை பெண்கள் அலங்கரிக்கிறார்கள்.காவல் துறை கண்காணிப்பாளராக சண்முகப்பிரியாநீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ஆண்டுதாேறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் காெண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில் பெண்கள் இரண்டாம் தர குடிகளாகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர். பெரும்பாலான மதக் காேட்பாடுகளும் கூட பெண்களுக்கான சம உரிமையையும், வாய்ப்பையும் வழங்கியதாகத் தெரியவில்லை.

நாகரிக வளர்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கக்கூடிய இக்காலகட்டத்திலும் பெண்கள் தங்களுக்கான உரிமை, சுதந்திரம் உள்ளிட்டவற்றை போராடிப் பெற வேண்டிய நிலையில்தான் இருந்து வருகின்றனர். அப்படிப் பாேராடி கல்வி, வேலைவாய்ப்பு, கருத்துரிமை உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் கலெக்டராக இன்னசென்ட் திவ்யா, காவல் துறை கண்காணிப்பாளராக சண்முகப்பிரியா, வனத்துறையில் முதுமலைப் புலிகள் காப்பக துணை இயக்குநர் சென்பகப்பிரியா,  சமூக நலத்துறை அலுவலர் தேவக்குமாரி என மாவட்டத்தின் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும், செயல்படுத்தவும், முடிவுகளை எடுக்கவும் கூடிய அதிகாரமிக்க பொறுப்புகளை நோக்கி நகர்வது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 முதுமலைப் புலிகள் காப்பக துணை இயக்குநர் சென்பகப்பிரியா

இப்படி நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பாெறுப்புகளில் பெண்கள் பணியாற்றுவது, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. 


[X] Close

[X] Close