கமல் கட்சியில் இணைந்தது ஏன்?- கோவை சரளா சொல்லும் புதிய காரணம் | actress kovai sarala joins kamal's makkal needhi maiam

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:55 (16/03/2019)

கமல் கட்சியில் இணைந்தது ஏன்?- கோவை சரளா சொல்லும் புதிய காரணம்

நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சென்னையில் இன்று நடந்த விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டார்.

கமல்ஹாசன்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக்கொண்டார். கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய கோவை சரளா, ``முதலில் எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் இங்கு வந்தேன். இங்கு போறபோக்கைப் பார்த்தால் `மக்கள் நீதி மய்யம்' கட்சி மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும் போல. அந்த அளவுக்குப் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 

கோவை சரளா

மகளிருக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்கின்ற நம்பிக்கையுடன் நான் கட்சியில் இணைகிறேன். மக்கள் என்னைச் சினிமாவில் வாழ வைத்தார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழகத்தில் நிறைய கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே `மக்கள் நீதி மய்யம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கமல் சார் நிறைய சாதனைகள் செய்துள்ளதுடன், எனக்கு உறுதுணையாகவும் இருந்தார். 

கமல்ஹாசன்

இப்போது அவருக்குச் சேவை செய்யவே கட்சியில் இணைந்துள்ளேன். சினிமாவில் நடிப்பவர்களுக்குத்தான் மக்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள முடியும். தமிழக மக்களின் மனநிலை எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். ஆண் - பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், நாடு நலம்பெறும்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close