சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த புதுக்கோட்டை நீதிமன்றம் | Pudukottai court awards man 7 years imprisonment for sexually harassing girls

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (08/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (08/03/2019)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணி என்பவருக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை -தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையைச் சேர்ந்தவர் மணி (50). இவர் நெம்மக்கோட்டை காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த 2017-ல் இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த  இரண்டு சிறுமிகளுக்கு, மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி, யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்தச் சிறுமிகள் வேலைக்குச் சென்று வந்த பெற்றோரிடம் நடந்ததைக் கூறினர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர் ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணி மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் நீதிபதி இளங்கோவன் மணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.


[X] Close

[X] Close