`லோக் அதாலத் நடக்கிறது, வழக்குகளில் தீர்வு காணலாம்’- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு | Mega Lok Adalat to be held tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (08/03/2019)

`லோக் அதாலத் நடக்கிறது, வழக்குகளில் தீர்வு காணலாம்’- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

நாளை நடைபெறும் தேசிய அளவிலான மெகா லோக் அதாலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான வழக்குகளுக்குத் தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``மாநில சட்டப் பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (9-ம் தேதி), சிறப்பு மக்கள் நீதிமன்றம் எனப்படும் தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் நடைபெறுகிறது. இதில், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குவது உட்படப் போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சமரச தீர்வு காணலாம்.

எனவே, வேலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், மெகா லோக் அதாலத்தில் பங்கேற்று தங்கள் வழக்குகளுக்குத் தீர்வு பெறலாம். போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து தெரிந்துகொள்ள, விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் 9445456009 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இதேபோல், வேலூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் 9445456025, காஞ்சீபுரம் மண்டலம்-9445456036, திருவண்ணாமலை மண்டலம்-9443988990, திருவள்ளூர் மண்டலம்-9445021399, கூட்டாண்மை அலுவலகம்-9445021204 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close