மிசோரம் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த கும்மனம் ராஜசேகரன்! - திருவனந்தபுரத்தில் போட்டியிட வாய்ப்பு | Mizoram governor kummanam rajasekharan resigns his post

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (08/03/2019)

மிசோரம் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த கும்மனம் ராஜசேகரன்! - திருவனந்தபுரத்தில் போட்டியிட வாய்ப்பு

மிசோரம் மாநில கவர்னராக இருந்த கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கும்மனம் ராஜசேகரன்


கேரள மாநில பா.ஜ.க. தலைவராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். கேரள மாநில பா.ஜ.க. தலைவராக தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று அவர் விரும்பினாலும் மேலிடம் விரும்பியதால் கவர்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு கேரள மாநில பா.ஜ.க. தலைவராக ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் வலுவான வேட்பாளரை களம் இறக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. இந்த நிலையில், மிசோரம் கவர்னர் பதவியில் இருந்து கும்மனம் ராஜசேகரன் இன்று ராஜினாமா செய்தார்.

கும்மனம் ராஜசேகரன்

அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அசாம் கவர்னருக்கு மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்துக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. கவர்னர் பொறுப்பை ராஜினாமா செய்த கும்மனம் ராஜசேகரன் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக கூறப்படுகிறது. அதிலும் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் கும்மனம் ராஜசேகரன் போட்டியிட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளதால், இந்த ராஜினாமா அரங்கேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


[X] Close

[X] Close