‘‘துக்கடா பசங்க போட்ட சாலை இப்படித்தான் இருக்கும்!’’ - ஒப்பந்ததாரரைப் பிடிபிடித்த நிலோஃபர் கபில் | Minister nilofer kabil warns contractor over road project

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (08/03/2019)

‘‘துக்கடா பசங்க போட்ட சாலை இப்படித்தான் இருக்கும்!’’ - ஒப்பந்ததாரரைப் பிடிபிடித்த நிலோஃபர் கபில்

‘‘வண்டி போகாம... யானையா போகும். துக்கடா பசங்கள வெச்சு வேலை செய்தால், சாலை இப்படித்தான் இருக்கும்’’ என்று தரமற்ற சாலையை அமைத்த இன்ஜினீயர் மற்றும் ஒப்பந்ததாரரை, அமைச்சர் நிலோஃபர் கபில் ஒரு பிடி பிடித்தார்.

அமைச்சர் நிலோஃபர் கபில்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை, கால்வாய் வசதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன. வாணியம்பாடி கோட்டைப் பகுதியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் இன்று காலை அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். 

தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து கடுப்பான அமைச்சர் நிலோஃபர் கபில், நகராட்சி இன்ஜினீயர் மற்றும் ஒப்பந்ததாரரை வரவழைத்துக் கண்டித்தார். பொறுப்பில்லாமல் பதில் சொன்ன இன்ஜினீயர் மற்றும் ஒப்பந்ததாரரைப் பார்த்து, ‘‘வண்டி போகாம... யானையா போகும். துக்கடா பசங்கள வெச்சு வேலை செய்தால், சாலை இப்படித்தான் இருக்கும்’’ என்று நிலோஃபர் கபில் ஒரு பிடிபிடித்தார்.

இதையடுத்து, தரமற்ற சாலையை அகற்றிவிட்டு மீண்டும் உறுதியான தரத்துடன் சாலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வார்த்தை உச்சரிப்பு எப்படி இருந்தாலும், தரமற்ற சாலையை அமைத்த அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரரை பொது இடத்தில் வைத்து சாட்டையால் அடிப்பதைப்போல் கடிந்துகொட்டிய அமைச்சர் நிலோஃபர் கபிலை, பொதுமக்கள் பாராட்டினர்.
 


[X] Close

[X] Close