மகளிர் தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்! - கோவையில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் | Three babies born in Coimbatore government Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:20:30 (08/03/2019)

மகளிர் தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்! - கோவையில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று கோவை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நலமுடன் பிறந்த சம்பவம் நடந்துள்ளது. 

மூன்று குழந்தைகள்

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் பாபு மற்றும் சிந்து. கர்ப்பிணிப் பெண்ணான சிந்து பிரசவத்துக்காக கடந்த 2-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிந்துவுக்கு மூன்று குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான இரும்புச் சத்து மருந்துகள் கொடுத்து கண்காணிக்கபட்டுவந்தது.

இந்நிலையில், பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு, சிசேரியன் மூலம் இன்று காலை 9.23 மணிக்கு ஒரு பெண் குழந்தையும் தொடர்ந்து 9.24, 9.25 என நிமிடத்துக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. மகளிர் தினத்தன்று மூன்று பெண் குழந்தை பிறந்தது கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துத் தரப்பிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரே பிரசவத்தில் வெற்றிகரமாக மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை, கோவை  அரசு மருத்துவனையில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.


[X] Close

[X] Close