பேராசிரியர் பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அவசரச்சட்டம் - இடதுசாரி அமைப்புகள் வரவேற்பு! | Cabinet Clears Ordinance On Reservation Roster For University Teachers

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (08/03/2019)

பேராசிரியர் பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அவசரச்சட்டம் - இடதுசாரி அமைப்புகள் வரவேற்பு!

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் நடைமுறையில் இருந்த 200 புள்ளி ரோஸ்டர் முறையை, 13 புள்ளி ரோஸ்டராக மாற்றியமைத்ததை திரும்பப் பெற  வேண்டும் என்று இடதுசாரி, சமூக நீதி மற்றும் தலித் இயக்கங்களின் கோரிக்கையை வைத்தோம். இதனை ஏற்று மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. 

தீண்டாமை

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேலராஜிடம் பேசியபோது, ''உச்சநீதிமன்ற உத்தரவை காரணமாக காண்பித்து, இட ஒதுக்கீட்டிற்கான அலகை ஒட்டு மொத்த பல்கலைக் கழகம், கல்லூரி என்பதற்கு மாறாக, துறை வாரியானதாக மாற்றியும், 200 புள்ளி ரோஸ்டர் முறைக்கு மாறாக 13 புள்ளிகள் என மாற்றியும் பல்கலைக் கழக மானியக் குழு ஆணை பிறப்பித்தது. இது பல துறைகளில் 4-க்கு குறைவான பேராசிரியர் எண்ணிக்கை இல்லாத போது, இட ஒதுக்கீடே இருக்காது. 7-க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பட்டியல் சாதி, பழங்குடியினர்க்கு இட ஒதுக்கீடு இருக்காது. 14-க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பழங்குடியினர்க்கு வாய்ப்பே இருக்காது என்ற நிலைமை ஏற்பட்டது.  இதற்கு நாடு முழுவதும்  கடும் எதிர்ப்பு எழும்பியது. 

உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு போடுவதற்கு முன்பே அவசரச் சட்டம் மூலம் இந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை.  இந்த நிலையில்  உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு பரிசீலனை மனுவும் தள்ளுபட செய்யப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.  ஜனவரி 5-ல் டெல்லியில் கூடிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அங்கம் வகிக்கும் தலித் சோஷன் முக்தி மஞ்ச்'சின் அகில இந்திய தலைமையும்  தீர்மானம் நிறைவேற்றியது. டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் இதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தது. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான அனைத்து இடதுசாரி, தலித், சமூக நீதி அமைப்புகளையும் மனதார பாராட்டுகிறோம். எதிர்வரும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் படவும் விழிப்புடன் செயல்படுவோம்'' என்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close