`இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க பழங்குடி மக்களிடம் வசூல் வேட்டை’ - கோவையில் நடந்த அவலம்! | Particular amount charged from Tribal people for government scheme

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (08/03/2019)

`இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க பழங்குடி மக்களிடம் வசூல் வேட்டை’ - கோவையில் நடந்த அவலம்!

தமிழக அரசு அறிவித்துள்ள 2,000 ரூபாய் பணம் கொடுக்க, கோவை பழங்குடி கிராமங்களில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பழங்குடி கிராமங்கள்

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. படிப்படியாக, அந்தக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவை மாவட்டம், ஆனைகட்டி பழங்குடியினர் மக்களிடம் தமிழக அரசு அறிவித்த, இரண்டாயிரம் ரூபாய் வழங்க பணம் வசூலித்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, மலைக் கிராமங்களான சின்ன ஜம்புகண்டி, பெரிய ஐம்புகண்டி, கூட்டுபுளி காடு மற்றும் ஆலமரம் மேடு ஆகிய கிராமங்களைச் சார்ந்த 236 குடும்பங்களிடம் தலா 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரிடம் 100 ரூபாய் வரை வசூலித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசியபோது, ``விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


[X] Close

[X] Close