சாதி, மதம் கேட்காத மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு! | MNM avoids caste and religion column for its to be candidates application forms

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:08 (16/03/2019)

சாதி, மதம் கேட்காத மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு!

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. மற்றொரு புறம் புதிய கட்சிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்காகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவல் மற்றும் மார்க்ஸிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகளோடு கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார். மார்க்ஸிஸ்ட்கள் தி.மு.க உடனான கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தேர்தலில் பங்கேற்பவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் பங்கேற்க ஆசைப்பட்டால் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என புது விதமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பாக வழங்கப்பட்டுள்ள விருப்ப மனுவில் சாதி, மதம் பற்றியான எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை, விருப்ப மனுத்தாக்கல் செய்பவர்களிடமும் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தனித் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கு மட்டும் சாதி அவசியமாக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close