அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பட்டாபிஷேகம் - திருச்சியில் களைகட்டிய மகளிர் தினக்கொண்டாட்டம் | World Women's Day Celebration at government school near trichy

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:23:30 (08/03/2019)

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பட்டாபிஷேகம் - திருச்சியில் களைகட்டிய மகளிர் தினக்கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 54 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பட்டாபிசேகம் செய்து கவுரவிக்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது.

உலக மகளிர் தினவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஊனையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில்  சர்வதேச மகளிர் தினம்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்காகப் பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன், ஊனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிதம்பரம், பள்ளி ஆசிரியர் ஜெயந்திராணி ஆகியோர் பெல் கட்டுறவு வங்கி முன்னாள் மேலாளர் நாகராஜன்,செஞ்சூரியா அகாடமி இயக்குநர் உஷாராணி, திருச்சி எய்ம் டூ ஹை தொண்டு நிறுவனர் மோகன்,  சர்வதேச சிலம்பாட்ட வீராங்கனையும் 10வயது மாணவியான சுகிதா, ஆயுதப்படை காவலரும் சிலம்ப ஆசிரியருமான அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகளிர் தினம்    

கிராமப்புற மாணவிகள் மனதளவில் தங்களை உணர்ந்து உயர்த்திக் கொள்ளும்வகையில் நிகழ்ச்சிகள் முற்றிலும் மாறுபட்ட வகையிலான சிந்தனையுடன் நடத்தப் பெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பண்டைய காலத்தில் இருந்த 54 தேசத்தின் பெயரில் ஒரு நாட்டிற்கு ஒரு மாணவி வீதம் அரசியாக்கி  அரியனை ஏற்றப்பட்டார்கள். இந்தப் பட்டாபிஷேக விழாவில் 54 நாடுகளின் அரசிகளுக்கு ஒருசக்கரவர்த்தியாக சிலம்பு சாதனைச் சிறுமி சுகிதா முடிசூட்டப்பட்டார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அனைத்தும் மேடையேற்றும்வரை மாணவிகளுக்கு பட்டாபிசேகம் பற்றி தெரியாததால், மாணவிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். விழாவில் பேசிய பெல் கட்டுறவு வங்கி மேனாள் மேலாளர் நாகராஜன், “மாணவ மாணவிகள் முந்தைய புரட்சிப் பெண்களைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும்” என்றார்.

பெண்கள் தினம்

சிலம்ப ஆசிரியர் அரவிந்த், “ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மரியாதை செய்யும் போதே நாம் உயருவோம்” என்றார். ஆசிரியர் உஷாராணி, “ஆசிரியர்களை மதித்து நடந்தால் கல்விச் செல்வம் தானே வரும். பெண்கள் கல்வியால் மட்டுமே உன்னத நிலை அடைய முடியும்” என முடித்தார்.

கடைசியாக பேசிய மோகன், “நமது உண்மையான ஹீரோ என்றால்,  அம்மா, அப்பா, ஆசிரியரே என்றார்.நிகழ்ச்சியில்  மாணவிகள் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்ட மேற்பு விழா  நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சற்குணன் 54 தேசத்திற்கு மாணவிகளை ஒவ்வொருவராக அரசியாக்கினார். 4 பேரரசிகளும் ஒரு சக்கர வர்த்தியும் பட்ட மேற்றனர்.மகளிர் தினவிழாவில் மாணவிகளுக்கு பட்டாபிசேகம் நடத்திய நிகழ்வு பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close