`அம்பானிகளுக்கு மக்களின் பணம், மக்களுக்கு லாபிபாப்’ - மோடியை விளாசிய சீத்தாராம் யெச்சூரி | Sitaram yechury slams modi in Coimbatore meeting

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (09/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (09/03/2019)

`அம்பானிகளுக்கு மக்களின் பணம், மக்களுக்கு லாபிபாப்’ - மோடியை விளாசிய சீத்தாராம் யெச்சூரி

கோவை, சிவானந்தாகாலனி  பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, கோவை மண்டல மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.

சீத்தாராம் யெச்சூரி

கூட்டத்தில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, “வளங்கள் இருந்தும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை, இதற்குக் காரணம் தகுதியில்லாத பிரதமர் நாட்டை ஆள்வது தான். மாநில அரசு (தமிழக) கமிஷன் வாங்குவது போல, மத்திய அரசும் தனியார் கம்பெனிகளிடம் கமிஷன் வாங்கி வருகிறது. அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், பி.ஜே.பி மக்களின் பணத்தை எடுத்துக் கொடுக்கிறது. கடந்த தேர்தலின் போது கொடுத்து வாக்குறுதிகளில், மோடி எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 

மக்களை ஏமாற்றி லாலிபாப் கொடுக்கிறார், விவசாயிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் என்கிறார். அப்படிப் பார்த்தால் ஒரு நாளுக்கு 4 ரூபாய் தான் வருகிறது. இப்படித்தான் அவர் மக்களை ஏமாற்றி வருகிறார். கோவை மோட்டார் பம்புகளைத் தயாரிக்கும் முதன்மை நகரம், ஆனால் தற்போது அப்படி இல்லை. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசும், மாநில அரசும் தான்.  ஐந்து லட்சம் பேர் தொழில் மற்றும் வேலை இழந்ததற்கு மத்திய அரசு முக்கிய காரணம். தமிழகம் பின்னோக்கி செல்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

நான் நாட்டின் பாதுகாவலன் என்று மோடி கூறுகிறார். ஆனால், மன்மோகன் சிங் ஆட்சியை, விட மோடி ஆட்சியில் தான் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. நமது ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டின் தூண்களாக உள்ள நீதித்துறை தொடங்கி அனைத்துத் துறைகளையும் பி.ஜே.பி அரசு தனது அதிகாரத்தை வைத்து தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் தேதி இன்னும் அறிவிக்கவில்லை, மோடி அரசு விழா என்று கூறி கொண்டு, நாடு முழுவதும் அரசியல் மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் யாருடைய பணம். மக்களின் பணத்தில் தான் அவர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

சீத்தாராம் யெச்சூரி

பெண்கள், சிறுபான்மை மக்கள், என்று பலதரப்பட்ட மக்கள் இந்த ஆட்சியில் தாக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆதாயத்துக்காகப் பிரிவினை வாதம் செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள். அப்படிப் பார்த்தால், இந்நேரம் அவர்கள் பத்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் வேலை வாய்ப்பைக் குறைத்திருக்கிறார்கள். 

உலகத்திலேயே நாங்கள் தான் பெரிய கட்சி. எங்களை வீழ்த்தும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை என்று மோடி சொல்லி வருகிறார். மகாபாரதத்தில் பாண்டவர்களை விட, கௌரவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனால், கடைசியில் நடந்து என்ன யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

 


[X] Close

[X] Close