‘உலக மகளிர் தினவிழா!’ -50 பெண் குழந்தைகளுக்கு சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டிய தபால் ஊழியர்கள் | World Women's Day Celebration in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:50 (09/03/2019)

‘உலக மகளிர் தினவிழா!’ -50 பெண் குழந்தைகளுக்கு சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டிய தபால் ஊழியர்கள்

ஆலங்காயம் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து, உலக மகளிர் தினவிழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

மகளிர் தினம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்களை ஒருங்கிணைத்து, உலக மகளிர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமைதாங்கினார். பெண் மருத்துவர்களும் செவிலியர்களும் கேக் வெட்டி மாறிமாறி ஊட்டி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். 

வேலூர் தலைமைத் தபால் நிலையத்திலும் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. முதுநிலை அஞ்சல் அதிகாரி அருள்மொழி சிவநேசன் தலைமைதாங்கினார். கோட்ட கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், உதவி கண்காணிப்பாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், 50 பெண் குழந்தைகள் பெயரில், தபால் அலுவலக ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்தை 'செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்தில் செலுத்தினர். 

மேலும், கோட்டை தபால்தலை மற்றும் நாணய சேகரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இந்தியா உள்பட 100 நாடுகள் வெளியிட்ட அன்னை தெரசாவின் 400-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறப்பாகப் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.


[X] Close

[X] Close