தாய்மார்களுடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடிய மாணவிகள் -அரசுப் பள்ளியின் அசத்தல் முயற்சி | madurai government school girls celebrated women's day with their mom

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (09/03/2019)

கடைசி தொடர்பு:14:55 (09/03/2019)

தாய்மார்களுடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடிய மாணவிகள் -அரசுப் பள்ளியின் அசத்தல் முயற்சி

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளின் தாய்மார்களுக்கு நடந்த மகளிர் தினவிழா சிறப்பாக நடைபெற்றது.

மகளிர்

ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான மாணவ மாணவிகளின் தாய்மார்கள்,  கலந்துகொண்டனர். மகளிர் ஓட்டப்பந்தயம், நொண்டி அடித்தல், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுதல், ஜோடிப்புறா, ஐவகை நிலங்கள் விளையாட்டு முதலிய வெளியரங்க விளையாட்டுகள், நினைவுத்திறன் போட்டி, தனிநடிப்பு, நடனம், கதை சொல்லல், கவிதை, பேச்சு முதலிய உள்ளரங்கப் போட்டிகளும் நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தங்க மூக்குத்தி, கேண்ட் பேக், சணல் பை, டிபன் பாக்ஸ், கேரியர் பாக்ஸ், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளி

நிகழ்ச்சிகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் தென்னவன் கூறுகையில், ``ஒத்தக்கடை அரசு துவக்கப்பள்ளி, மாணவர்களின் திறமையை வளர்ப்பதில் எப்போதும் மறப்பதில்லை. அதனால்தான் ஆண்டுதோறும் சேர்க்கை விகிதம் அதிகரித்துவருகிறது. மாணவர்களுக்கு மட்டும் திறன் வளர்ப்பது முக்கியம் அல்ல. அவர்களை வளர்த்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் திறன் வளர வேண்டும்; அப்போதுதான் மாணவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். அதனால், இப்படியான மகளிர் தின நிகழ்ச்சி நடத்தினோம்.

மகளிர் தினம்

நிகழ்ச்சியில், மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், உடல்நலன் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.  செந்தில்நாதன், மகளிர் தின சிறப்பை எடுத்துரைத்தார். ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை திட்ட இயக்குநர் வெண்ணிலா, குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். விழாவில் ஆதர்ஷ் இன்னோவேட்டர்ஸ் ரோட்டரி கிளப் செயலாளர் விஜய் ஆதர்ஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஜே.சி.ஐ தலைவர்கள் ஹேமா கண்ணன், ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்” என்றார்.

 


[X] Close

[X] Close