``இலை, பூ, கனிக்குப் பின் முரசுகொட்டும்!" -செல்லூர் ராஜூ சூசகம் | madurai minister sellur raju meet press

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:13 (16/03/2019)

``இலை, பூ, கனிக்குப் பின் முரசுகொட்டும்!" -செல்லூர் ராஜூ சூசகம்

தங்களது கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என செல்லூர் ராஜூ இலை, பூ, கனி, முரசு இடம் பெறும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ

 

மதுரையில், அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு அரசு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிவருகிறோம். குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக, 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நடைபெற்றுவருகிறது” என்றார். 

 பிரேமலதா தனது பேட்டியில், தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேசியவர் விஜயகாந்த் என கூறியுள்ளாரே... என செய்தியாளர்கள் கேட்டனர்.  அதற்கு, ``பிரமலதா விஜயகாந்த் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினார் எனத் தெரியவில்லை. ஆனால், தேர்தல் கூட்டணியில் இலை, பூ, கனிக்குப் பிறகு முரசு கண்டிப்பாக ஒலிக்கும்” என்றவர், காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 47 நாள்கள் முடக்கியது அ.தி.மு.க உறுப்பினர்கள்தான் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். கூட்டணி விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. பிரேமலதா விஜயகாந்த், 2 நாள்கள் பொறுத்த பின் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ தனது கருத்தினை இவ்வாறு தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close