விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு! - கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்ட விவசாயிகள் | Farmers protest at komarapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (09/03/2019)

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு! - கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்ட விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் 6-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில் விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டுசெல்ல அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தைச்  செயல்படுத்தினால், "தங்களின் விளைநிலத்தின் மதிப்பு கடுமையாகக் குறையும். விளைபொருள்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும். மொத்தத்தில் எங்கள் வாழ்வாதாரமே பறிபோகும் நிலை உருவாகும். இதனால், இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, இதற்குப் பதிலாக கேரளாவைப் போல் சாலையோரங்களில் கேபிள் அமைத்து, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறி பல நாள்களாக பல்வேறு வழிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த படைவீடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்திலும், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். பல நாள்களாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின்  கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அரசைக் கண்டித்து வீடு, நிலங்களில் கறுப்புக்கொடி கட்டி, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை  அரசு கைவிடும் வரை எங்களது காலவரையற்ற போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close