`பாடகர் டு அரசியல்வாதி!’ - அ.ம.மு.க-வில் இணைந்தார் மனோ | singer mano joined ammk

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:13 (16/03/2019)

`பாடகர் டு அரசியல்வாதி!’ - அ.ம.மு.க-வில் இணைந்தார் மனோ

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் கட்டசியில் இணைந்தார்.

மனோ

ஆந்திரா மாநிலத்தில் 1965-ம் ஆண்டு பிறந்தவர் மனோ. இஸ்லாமிய குடும்பத்தைச் சேரந்த மனோவின் இயற்பெயர், நாகூர் பாபு. பிறகாலத்தில் இவர் தன் பெயரை மனோ என மாற்றிக்கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமில்லாமல், நடிகராகவும் வலம்வந்தவர் மனோ. 'சிங்காரவேலன்', 'எனக்கு 20 உனக்கு 18' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'சின்னத்தம்பி' படத்தில் இவர் பாடிய `தூளியிலே ஆடி வந்த’ பாடலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் 'கலைமாமணி', ஆந்திரா அரசின் 'நந்தி' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

பாடகர்

 

தற்போது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துவருகிறார். இந்நிலையில், இன்று அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.  கடந்த சில நாள்களுக்கு முன், நடிகர் ரஞ்சித், பா.ம.க-விலிருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்தார். நேற்று, நடிகை கோவை சரளா, கமல் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பார்வையை அரசியல் கட்சிகள்மீது திசைதிருப்பியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளில் சேர்ந்த திரைத் துறையினர், பிரசாரங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பார்கள் எனத் தெரிகிறது.


[X] Close

[X] Close