``இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை விடுவித்தது யார்?!’’ - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி | Who released Masood Azhar from Indian jail?’: Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (09/03/2019)

கடைசி தொடர்பு:20:30 (09/03/2019)

``இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை விடுவித்தது யார்?!’’ - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

ராகுல் காந்தி

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அதற்காகத் தேசிய கட்சிகள் மாநிலங்களில் தங்களது கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பெற்ற பிறகு சந்திக்கும் மிகப்பெரிய தேர்தல் இது. தேர்தல் பணிகள் ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஹவேரி தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசியவர்,  ``கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பிரதமர் மோடியிடம் ஒரு சிறிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நமது வீரர்களைக் கொன்றது யார். ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் தலைவர் பெயர் என்ன. மசூத் அசார் யார். இந்த மசூத் அசாரை சிறையில் இருந்து விடுதலை செய்து அனுப்பியது யார் மற்றும் அவர் எப்படி அனுப்பப்பட்டார் என்பதைப் பிரதமர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 

நாங்கள் உங்களைப் போன்றவர்கள் அல்ல பயங்கரவாதத்திற்கு முன்பு மண்டியிட மாட்டோம். சீன ராணுவம் தோக்லாம் பகுதியில் அத்துமீறி நுழைந்த போது நீங்கள் எங்கு அமர்ந்து இருந்தீர்கள் என்று கூற முடியுமா. ஏன் இப்போதும் கூட சீன ராணுவம் அப்பகுதியில் இருப்பது இந்த உலகமே அறியும். பாரதிய ஜனதா கட்சி இரண்டு இந்தியாவை உருவாக்க முயல்கிறது. ஒன்று வர்த்தகர்களை கொண்டஇந்தியா. அவர்கள் உங்கள் காசுகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவர். மற்றொன்று ஏழைகள், விவசாயிகள் கொண்ட இந்தியா. இதில் வேலை வாய்ப்பு இருக்காது, வறுமை மற்றும் பசி ஆகியவை இருக்கும். காங்கிரஸ் இந்த பிளவுகளை ஒருபோதும் அனுமதிக்காது. இது ஒரே நாடு இங்கு அனைவருக்கும் நீதி பெறும் உரிமை உண்டு. சட்டத்தை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயிகள் தான் காங்கிரஸ் உங்களோடு இருக்கிறது கவலை கொள்ளாதீர்கள். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்ததும் ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவரப்படும் ”என்றார். 

1999-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார் இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார். அமெரிக்க பத்திரிகையாளரைக் கொலை செய்த வழக்கில் மசூத் அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். சிறையை உடைத்துத் தப்பிக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. டிசம்பர் 24,1999-ல் 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை அந்த அமைப்பினர் கடத்தினர். மசூரை விடுவித்தால்தான் விமானத்தில் இருக்கும் பயணிகளை உயிருடன் விடுவிப்போம் என்றனர். வேறு வழியின்றி அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மசூரை விடுதலை செய்தது. அதன்பின் மசூரை இந்தியா அரசால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதன் பின்னர் இந்தியாவில் நடந்த பல தாக்குதலுக்கு மசூர் அசாத் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என உளவுத்துறை தெரிவிக்கிறது.,இதனைக்குறிப்பிட்டுத் தான் ராகுல் தனது பிரசாரத்தில் பேசியுள்ளார்.
 


[X] Close

[X] Close