`தி.மு.கவுக்கு அரணாக என்றும் ம.தி.மு.க இருக்கும்!’ - வைகோ | Vaiko slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (09/03/2019)

கடைசி தொடர்பு:22:40 (09/03/2019)

`தி.மு.கவுக்கு அரணாக என்றும் ம.தி.மு.க இருக்கும்!’ - வைகோ

``பேரறிஞர் அண்ணாவும், அண்ணன் கலைஞரும் கட்டிகாத்து வளர்த்த தி.மு.கவிற்கு  அரணாக ம.தி.மு.க இருக்கும். இனி என்றும் கூட்டணி பற்றிய குழப்பங்கள் இன்றி, தொடர்ந்து தி.மு.க வின் அரணாக ம.தி.மு.க செயல்படும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

ம.தி.மு.க மகளிரணி சார்பில் உலக மகளிர் தினவிழா திருச்சியில் நடைபெற்றது. மகளிரணி மாநிலச் செயலாலளர் டாக்டர் ரெஹையா தலைமை வகித்தார். இதில் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``நாட்டில் மதசார்பின்னைமைக்கும் சிறுபான்மையினருக்கும் பேராபத்து இந்த மோடி அரசால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு எரித்தார்களே, அதற்கு ஒரு கண்டனமேனும் தெரிவித்தாரா, காந்தி பிறந்த அதே குஜராத்தில் பிறந்த 'மிஸ்டர் மோடி?’. ஆகவே பேரறிஞர் அண்ணாவும், அண்ணன் கலைஞரும் கட்டிகாத்து வளர்த்த தி.மு.கவிற்கு  அரணாக ம.தி.மு.க இருக்கும். இனி என்றும் கூட்டணி பற்றிய குழப்பங்கள் இன்றி, தொடர்ந்து தி.மு.க வின் அரணாக ம.தி.மு.க செயல்படும் என்பதனை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி இந்த முடிவினை எடுத்துள்ளோம்.

வைகோ

தி.மு.க தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் , இடைத் தேர்தல் இதனுடன் நடத்தப்பட்ட அந்த 21 சட்டமன்ற தொகுதிகளில் பெருவெற்றியை பெறும். தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் பா.ஜ.க தலையையிலான கூட்டணி படுதொல்வி அடையும். நாட்டில் மோடி எதிர்ப்பலை வீசுகிறது. 130 இடங்களுக்கு மேல் அவர்களால் வெல்ல முடியாது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கண்டு இந்தியாவே பெருமிதம் அடைகிறது. ஆனால், இப்படி தீவிரவாதத்தை தடுக்க தவறிய மோடி அரசின் கையாளாகாத தனத்தை நான் சாடுகிறேன்.

பேச்சு

எங்கள் கூட்டணி நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் , எல்லை தாண்டி வரும் தீவிரவாதத்தை கருவறுக்கும்.   தேர்தல் முடிவிற்கு பிறகு , ஜனநாயக சுடரை உயர்த்தும் வகையிலும் , கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் மாநில கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும், நான் மக்களவைக்கு போட்டியிடுவதா? மாநிலங்களவைக்கு போட்டியிடுவதா? என்பதைப் பற்றி இப்பொது கூற இயலாது. தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதியானது. துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தே.மு.தி.கவினரை எச்சரிக்கிறேன். நாங்கள் ஒரு கூட்டணியில் இருந்தால் , அதற்காக உயிரையும் கொடுப்போம். துரை முருகன் வீட்டை முற்றுகையிடுவது போன்ற வேலையில் ஈடுபட்ட , வேண்டாத விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம்” என்று எச்சரித்தார்.


[X] Close

[X] Close