கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்! | Paddy bags are stagnant in purchase centre at Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (09/03/2019)

கடைசி தொடர்பு:22:20 (09/03/2019)

கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதி வைகை பாசனம் பெறும் பகுதி. நெல் விளைச்சல் அதிகமாக உள்ள பகுதி. திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல்முதலாக இங்கு தான் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த  10 நாட்களாக நெல் மூட்டைகளை  ஏற்றுவதற்கு  லாரிகள்  வரவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சுத்தப்படுத்தப்பட்ட 40 கிலோ மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் விவசாயிகள் காத்துக்கிடக்கிறார்கள்.  


நெல் கொள்முதல் நிலையம் 

மூட்டைக் கட்டிய நெல் களத்தை விட்டு வெளியேறாததால் மற்ற விவசாயிகளும் தங்கள் நெல்லைக் கொண்டு வரமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்னும் தங்கள் நெல்லைக் கொண்டு வரவில்லை. இந்த கொள்முதல் நிலையம் சிறிய கொள்முதல் நிலையம். ஊர் மையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழா வர இருக்கிறது. எனவே விரைந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


நெல் மூட்டைகள்

 இதுகுறித்து காசிமாயன் என்ற விவசாயி பேசும்போது, "போன வருஷத்தை விட இந்த வருஷம் வெளைச்சல் குறைஞ்சுப்போச்சு. வறட்சி,வெயில், எலித்தொல்லைன்னு நெல் விளைச்சல் ரொம்ப குறைஞ்சு போச்சு. எங்க பகுதியில சன்ன ரக நெல்தான் அதிகமா விளைய வெப்போம்.  வெளிச்சந்தையில இந்த ரக நெல் கிலோ 22 ரூபாய் வரைக்கும் விக்குது. கொள்முதல் நிலையத்துல கிலோ 18 ரூபாயிக்குத் தான் எடுக்குறாங்க.காத்திருக்கிறதால நெல்லோடு எடை குறையும். விவசாயிங்க கொண்டு வந்தவுடனே எடுத்துக்கிட்டா தான் ஒரளவுக்கு உதவியாக இருக்கும். ரொம்ப நாள் காய வச்சா எடை குறைஞ்சு, வர்ற அரைகுறை வருமானத்துக்கும் சிக்கலாகிடும்.  ஏற்கனவே உரம், பூச்சி மருந்து விலைங்க மூனு மடங்கு அதிகமா இருக்கிற நேரத்துல நெல் வருமானமும் குறைஞ்சா எப்படி சமாளிக்கிறது. விலை சரியா கிடைச்சா தான சீக்கிரம் கடன அடைக்க முடியும். இங்க இருக்குற நெல் மூட்டைகளை லாரியில் எடுத்துட்டு போக அதிகாரிகள் முயற்சி செய்யனும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close