தேர்தலில் குதிக்கும் விவசாய சங்கங்கள் - திருச்சியில் அறிவித்த அய்யாக்கண்ணு | Farmers going to contest in loksabha election says Ayyakannu

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (10/03/2019)

கடைசி தொடர்பு:07:20 (10/03/2019)

தேர்தலில் குதிக்கும் விவசாய சங்கங்கள் - திருச்சியில் அறிவித்த அய்யாக்கண்ணு

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர யார் உறுதி கூறுகின்றார்களோ, அவர்களுக்குத் தேர்தலில் ஆதரவளிக்கவும், கோரிக்கையை ஏற்க மறுக்கும் கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுவது என்றும், கூடவே வரும் தேர்தலில் போட்டியிடுவது என விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளது.

விவசாயிகள்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாமலை நகரில் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டுஇயக்க தலைவர் தெய்வசிகாமனி, பொதுச்செயலாளர் ராம கவுண்டர், பொருளாளர் சேரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அய்யாகண்ணு

 விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க, விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், நாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைத்திடக் கோரியும், 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் மற்றும் பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் வழங்கிடவும், விவசாயிகளுக்குத் தனிநபர் இன்சூரன்ஸ் வழங்கப் போன்ற கோரிக்கைகளை  வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றித் தர யார் உறுதி கூறுகின்றனரோ, அவர்களுக்கே தேர்தலில் ஆதரவளித்திடவும், தங்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பவர்களுக்கு எதிராகச் செயல்படுவது பற்றி அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றுகூடி ஆலோசித்தனர்.

இறுதியாக . வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் தம் கோரிக்கையை முன்னிறுத்திப் போட்டியிடுவதாக ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விவசாய சங்கங்களின் சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து எங்களின் முடிவுகளை விரைவில் வெளியிடுவோம்.

விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்யப்படும் வரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளை எதிர்த்து இந்த தேர்தலில் பணியாற்றுவோம்"  என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close