25-வது ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் - கோவையில் நடைபெற்ற லக்ஸ் டிரைவ்..! | Mercedes benz luxe drive event in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (10/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (10/03/2019)

25-வது ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் - கோவையில் நடைபெற்ற லக்ஸ் டிரைவ்..!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதைக் கொண்டாடும் வகையில், கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் `லக்ஸ் டிரைவ் லைவ் 2019' நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, இன்றும் இந்த லக்ஸ் டிரைவ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரு பக்கம் விதவிதமான சமையல், இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களின் தனித்தன்மை குறித்து விளக்கப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ்

`செல்ப்-டிரைவ்' பிரிவில்  எஸ்.யூ.வி உள்ளிட்ட அனைத்து விதமான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் இடம் பெற்றிருந்தன. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி, செடான் மற்றும் இதர கார்களை வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஜிஎல்ஏ, ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் முதல் எஸ் கிளாஸ் வரையிலான பிராண்ட் கார்கள் மற்றும் சி - கிளாஸ், இ - கிளாஸ், சிஎல்எஸ் மற்றும் இ- கிளாஸ், இ - கிளாஸ் ஆல் டெர்ரைன் மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 ஆகிய கார்களும் இதில் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக, இந்த நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை விளக்குவதற்காகச் சிறப்பு டெமோவும் நடைபெற்றது. 25 டிகிரியில் காரை சாய்த்து நிறுத்துவது, 45 டிகிரி கோணத்தில் நிற்பது, சடன் பிரேக் அடிப்பது என்று டெமோ மூலம் வாடிக்கையாளருக்கு கார்களின் தொழில் நுட்பம் குறித்து த்ரில் அனுபவத்துடன் விளக்கப்பட்டது.  இதற்காக, நாடு முழுவதும் அனுபவமிக்க ரேஸர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.  கோவையைத் தொடர்ந்து நாடு முழுவதும் 11  இடங்களில் லக்ஸ் டிரைவ் லைவ் நடைபெற உள்ளது.

 

 


[X] Close

[X] Close