பள்ளிக்கூட மேற்கூரையில் பற்றிய தீ - விரைவாக செயல்பட்டு அணைத்த தீயணைப்புத் துறையினர்! | Fire at government school tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (10/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (10/03/2019)

பள்ளிக்கூட மேற்கூரையில் பற்றிய தீ - விரைவாக செயல்பட்டு அணைத்த தீயணைப்புத் துறையினர்!

சுட்டெரிக்கும் வெப்பத்தால் திருப்பூர் அருகே அரசுப்பள்ளி மேற்கூரையில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ

திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ளது பழைய நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தப் பள்ளிக்கூட்டத்தின் ஒருபகுதியில்,  ஒரு ஓட்டு கட்டிடம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. அங்கு தற்போது மாநகராட்சி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டுக் கட்டிடத்தின் மேற்கூரை மீது மரங்களில் இருந்து உதிர்ந்த  வறண்ட இலைகள் அதிகளவு கிடந்திருக்கிறது.

இந்தநிலையில் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக மேற்கூரை மீது உதிர்ந்து கிடந்த இலைகளில் இன்றைக்குத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்துப் பதறிய பள்ளிக்கூட ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர், உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆரம்ப கட்டத்திலேயே தீ அணைக்கப்பட்டதால், பெரியளவில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. சிறப்பாக செயல்பட்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்த தீயணைப்புத் துறையினரை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.


[X] Close

[X] Close