"பிரேமலதா விஜயகாந்த் தரம்தாழ்ந்த அரசியல்வாதி!" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் | Narayanasamy slams Premalatha vijayakanth

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (10/03/2019)

கடைசி தொடர்பு:12:19 (16/03/2019)

"பிரேமலதா விஜயகாந்த் தரம்தாழ்ந்த அரசியல்வாதி!" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

“பிரேமலதா விஜயகாந்த் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி” என்று புதுச்சேரி முதல்வர்நாராயணசாமி விமர்சித்திருக்கிறார்.

நாராயண சாமி

புதுச்சேரி வைசியாள் வீதியில் புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக தி.மு.கவை பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தரக்குறைவான விமர்சனம் செய்து வருகிறார். இது அவருடைய அரசியலுக்கு ஏற்றதல்ல. தேமுதிக ஒரே நேரத்தில் திமுகவுடனும், அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசினார்கள்.

பிரேமலதா

ஆனால் அந்த பேரம் எடுபடவில்லை. தி.மு.க வின் கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டது என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதன்பிறகு தே.மு.தி.கவினர் அ.தி.மு.கவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பிரேமலதா தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. கொள்கை ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இதிலிருந்து பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பது தெரிகிறது. தேமுதிக மக்கள் மத்தியில் செல்லும்போது மக்கள் கண்டிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதாவை திரும்பி பார்க்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜெயலலிதா, ரங்கசாமி தன்னை முதுகில் குத்திவிட்டார் அதனால் ரங்கசாமிக்கு போடுகிற ஓட்டு செல்லாத ஓட்டு என்று பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், அ.தி.மு.கவுடன் ரங்கசாமி தற்போது வைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்று அ.தி.மு.கவினர் தெரிவிக்க வேண்டும். பா.ஜ.கவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளதிலிருந்தே ரங்கசாமி சொந்த காலில் நிற்க தெரியாதவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close