அதிகாரிகளின் அலட்சியம் - பரிதாபமாகப் பலியான கோவை போக்குவரத்துக் கழக ஊழியர் | Coimbatore Transport corporation employee death

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (10/03/2019)

கடைசி தொடர்பு:10:02 (11/03/2019)

அதிகாரிகளின் அலட்சியம் - பரிதாபமாகப் பலியான கோவை போக்குவரத்துக் கழக ஊழியர்

கோவை போக்குவரத்துக் கழகப் பணிமனையில், பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

கோவை உக்கடம் பகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்துக்குச் சொந்தமான பணிமனை உள்ளது. இங்கு, காரமடை பகுதியைச் சேர்ந்த கணபதி (56) என்பவர் கிளீனராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பேருந்திலிருந்து  டயர்களை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்த டயர்கள் அவர் மீது விழுந்தது. படுகாயமடைந்த தொழிலாளியை உடன் பணி செய்பவர்கள் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணபதி

கணபதி உயிரிழந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், முறையான பராமரிப்பு, பொருள்கள் ஏதும் இல்லாதது ஆபத்தைத் தருகிறது என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; தொழிலாளியின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள்மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


[X] Close

[X] Close