ஒரு வருடம் ஆகியும் மேம்படுத்தப்படாத தொலைத்தொடர்பு வசதி - குரங்கணி மக்கள் குமுறல் | No problem yet solved in kurangani; no response from District Administration

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (11/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (11/03/2019)

ஒரு வருடம் ஆகியும் மேம்படுத்தப்படாத தொலைத்தொடர்பு வசதி - குரங்கணி மக்கள் குமுறல்

குரங்கணி மலைப்பகுதியில்  ட்ரெக்கிங் சென்றவர்கள், காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த துயரச் சம்பவம் நடைபெற்று இன்றோடு ஒருவருடம் ஆகிறது. அன்று குரங்கணி எப்படி இருந்ததோ, அதேபோலத்தான் இன்றும் இருப்பதாகவும், தொலைத்தொடர்பு வசதிகள் இதுவரை மேம்படுத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குரங்கணி

குரங்கணியில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை இருந்தது. எல்லோரும், பிஎஸ்என்எல் சிம் தான் வைத்திருந்தோம். எப்போதாவது சிக்னல் எடுக்காது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் சிக்னல் இருக்கும். காலம் செல்லச்செல்ல அந்த பிஎஸ்என்எல் சேவையும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது. ஏன் என்று கேட்டோம். உங்கள் பகுதியில் லாபம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். எந்தப் பதிலும் இல்லை. அப்போதுதான், எங்கள் பகுதி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியானார்கள்.

தீ விபத்து

அப்போது மீட்புப்பணிக்கு வந்தவர்கள், மொபைல் சிக்னல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார்கள். மலையில் என்ன நடக்கிறது என வெளி உலகத்திற்குச் சொல்ல முடியாமல் தவித்தார்கள். நாங்கள் மனு கொடுத்தபோதே இப்பிரச்னையைச் சரிசெய்திருந்தால், தகவல்களை வேகமாகத் தெரிவித்து, தீயில் சிக்கியவர்களை விரைவாக மீட்டிருக்கலாம். சரி, நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது.

குரங்கணி மலை

அதன் பிறகாவது தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தரலாமே... இன்று வரை நாங்கள் தொடர்புஎல்லைக்கு அப்பால்தான் இருக்கிறோம். ஆபத்துக் காலங்களில்கூட ஆம்புலன்ஸை கூப்பிட முடியவில்லை” என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர் குரங்கணி பகுதி மலை கிராம மக்கள்.


[X] Close

[X] Close