இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உயிர்பெறும் சோழவரம் - விமானப்படையின் புதிய திட்டம் | Sholavaram airstrip turned into first east coast surveillance base

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (11/03/2019)

கடைசி தொடர்பு:11:00 (11/03/2019)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உயிர்பெறும் சோழவரம் - விமானப்படையின் புதிய திட்டம்

இரண்டாம் உலகப் போரின்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம், சென்னைக்கு வடக்கே 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவரத்தில் உள்ளது. பிறகு, அந்த ஓடுதளம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.  ஏரிக்கு பெயர்பெற்ற சோழவரம், கூடிய விரைவில் மற்றுமொரு சிறப்பைப் பெறவுள்ளது.

விமான தளம்

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தை, விமான கண்காணிப்புத் தளமாக மாற்ற இந்திய விமானப் படை ஆலோசனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அப்படி இந்த இடம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமையவுள்ள முதல் விமானப்படை தளம் என்ற பெயர் பெறும். மேலும், அந்த இடத்தில் சில போர் ஹெலிகாட்டர்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 

சோழவரம்

கிழக்குக் கடற்பகுதியின் பாதுகாப்புக்காகவும் இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கைக் கண்காணிக்கவும் இது பயன்படும். தொடர்ந்து 2,500 கி.மீ வரை உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா ஆகிய கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்கவும்,  கிழக்கு மற்றும் தென் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் விமானங்களைக் கண்காணிக்கவும் இந்த விமான கண்காணிப்புத் தளம் உதவும்.  

கடற்கரை ஓரங்களில் அணு மற்றும் அனல் மின் நிலையங்கள்கொண்ட, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரும் தொழில் மயமான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. அதேபோல, ஆந்திராவும் சிறந்த தொழில்துறை மையமாக உள்ளது. இவற்றைக் கண்காணிக்கும் வகையில் விமான தளம் அமைக்கவேண்டியது அவசியம் எனக் கூறப்படுகிறது.  


[X] Close

[X] Close