துரைமுருகன் பங்களாவில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்! - போலீஸ் தீவிர விசாரணை | Sandalwood cutting in the durai murugan bungalow! -Police investigation

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:03 (11/03/2019)

துரைமுருகன் பங்களாவில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்! - போலீஸ் தீவிர விசாரணை

தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான பங்களாவில், 2 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துரைமுருகன்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சம்கொல்லை புதூர் கிராமத்தில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான பங்களா ஒன்று (கெஸ்ட் ஹவுஸ்) உள்ளது. இங்குள்ள தோட்டத்தில் சந்தன மரம், தேக்கு உள்பட பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்தப் பங்களாவில், கோடைகாலத்தில் துரைமுருகன் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுப்பார். புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை (55) என்பவர் செக்யூரிட்டியாக வேலைசெய்கிறார். 

பங்களாவைச் சுற்றியும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பங்களாவுக்கு அருகிலிருந்த இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் துணிகரமாக வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த பங்களா செக்யூரிட்டி சின்னதுரை (55), ஏலகிரி போலீஸில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து, கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, சந்தன மரங்களை வெட்டி, கடத்திய கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். 


[X] Close

[X] Close