அரசியல் கட்சிகளுக்குக் கடிவாளம் போட்ட நீலகிரி கலெக்டர் திவ்யா! | Code of conduct meeting in ooty

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:45 (16/03/2019)

அரசியல் கட்சிகளுக்குக் கடிவாளம் போட்ட நீலகிரி கலெக்டர் திவ்யா!

தேர்தல் பிரசாரம் தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நடத்தை விதிகள்குறித்த விளக்கக் கூட்டம், ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று நடைபெற்றது.  இதில், தேர்தல் நடத்தை விதிகளில் தண்டனைக்குறிய குற்றங்கள்குறித்து விளக்கப்பட்டது.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "வாகனங்களில் ஒரு லட்சம் ரூபாய் பணம் அல்லது ரூ.10 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும். இரவு 10 மணி முதல் 6 மணி வரை மெசேஜ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-களில் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குக்காக ரொக்கம் வழங்கினாலும் வாங்கினாலும்  ஓர் ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் இந்தத் தேர்தலில் பிரசாரத்திற்கான இடங்கள் அளிப்பதில் கூடுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன" என்றார். இந்தக் கூட்டத்தில், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close