``என் கணவரை கோபப்படுத்தி அடிக்கடி திட்டுவாங்குவேன்!’’ - நடிகை குஷ்பு | actress kushboo sharing about her marriage life memories

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:45 (11/03/2019)

``என் கணவரை கோபப்படுத்தி அடிக்கடி திட்டுவாங்குவேன்!’’ - நடிகை குஷ்பு

குஷ்பு

டந்த மார்ச் 9-ம் தேதி, இயக்குநர் சுந்தர்.சி - நடிகை குஷ்புவின் திருமண தினம். அன்று, சமூக வலைதளங்களில் தன் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் குஷ்பு. இவர், தன் திருமண வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியாகப் பேசுகிறார். 

குஷ்பு

``சினிமாவில் எனக்கான புகலிடம் எளிதில் கிடைச்சுடலை. நிறைய உழைச்சேன்; கஷ்டப்பட்டேன். பணம், புகழ் மட்டுமே வாழ்க்கையில்லையே! ஒருகட்டத்தில் அதை உணர்ந்து, 30 வயசுக்குள் கல்யாணம் செஞ்சுக்கத் திட்டமிட்டிருந்தேன். `முறைமாமன்’ படம் என் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷலானது. அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான், என் கணவர் சுந்தரும் நானும் காதலிக்க ஆரம்பிச்சோம். அதற்கு அஸ்திவாரம் போட்டது, என் அம்மாவுக்கும் மேலான யுபின் ஃபெர்னாண்டஸ் அம்மாதான். எங்க சந்திப்பு தொடங்கி, 24 வருஷமாகுது. எங்க கல்யாணம் நடந்து, 19 வருடங்களாகுது. இத்தனை ஆண்டுகளாக, குடும்ப வாழ்க்கையிலயும் சினிமா துறையிலயும் நாங்க ஒண்ணாவே வளர்ந்திருக்கிறோம். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை. என் மகள்களுக்கு என்னைவிட என் கணவர் மேலதான் அதிக அன்பு. எனக்கும் அவர் மேலதான் அதிக அன்பு. என் கணவர்கிட்ட திட்டுவாங்குறது, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே அடிக்கடி அவரைக் கோபப்படுத்தி, அவர்கிட்ட செல்லமா திட்டுவாங்குவேன். இந்த மகிழ்ச்சி என்றென்றும் தொடரணும். 

குஷ்பு

குறிப்பா, புடவைகள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். `சம்பளத்துல பாதியை, இப்படிப் புடவையிலேயே செலவழிக்கிறீயே’னு கணவர் அடிக்கடி சொல்லுவார். வீட்டுல என் வாட்ரோப்தான் பெரிசு. உன்னால எங்க டிரஸ் வைக்க இடமில்லைனு, வீட்டுல மத்தவங்க சண்டைக்கு வருவாங்க. நான் ஆசைப்பட்டு எது கேட்டாலும், அவர் வாங்கிக்கொடுத்திடுவார்’’ எனப் புன்னகைக்கிறார் குஷ்பு.
 


[X] Close

[X] Close