ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்குப் புவிசார் குறியீடு! | Thirubhuvanam silk sarees got geographical indication

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (11/03/2019)

கடைசி தொடர்பு:14:51 (11/03/2019)

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்குப் புவிசார் குறியீடு!

ரோடு மஞ்சளைத் தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

பட்டு சேலை

பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கலை நயமிக்க பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து இதுவரை சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை உட்பட 29 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், உலகளாவிய அளவில் அதன் மதிப்பு உயரும். கடைசியாக, கடந்த வாரத்தில் ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது திருபுவனம் பட்டும் இணைந்துள்ளது. 

கைத்தறி

சின்னராஜா``திருபுவனம் பட்டின் நெசவு முறை மற்றும் கலை நயமிக்க வடிவமைப்பு ஆகியவற்றுக்காக இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் முழுவதும் கைத்தறிகளின் மூலமாக நெசவு செய்யப்படுகின்றன. தங்கமுலாம் பூசப்பட்டு மிகச்சிறப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றன. நாள்கள் செல்லச் செல்ல இதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. பாரம்பர்யமிக்க இந்தப் பட்டுச் சேலைகள், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் சக்ரவர்த்தியின் சொந்தப் பயன்பாடுக்காக முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.

இன்று அனைவரின் விருப்பமாகவும் இந்த வகை பட்டுச் சேலைகள் இருக்கின்றன. இதற்கு, புவிசார் குறியீடு கிடைத்திருப்பதின் மூலம் உலகளாவிய அளவில் இதன் மதிப்பு உயரும். இதன் மூலம் இதைத் தயாரிப்பவர்கள், பொருளாதார ரீதியாக மேம்பட இந்த அங்கீகாரம் நிச்சயம் உதவும்'' என்கிறார் இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தின் இணைப்பதிவாளர் சின்னராஜா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close