`5 மரக்கன்றுகளை நடணும்!'- சிறுமியை வன்கொடுமை செய்தவரின் வாரன்ட்டை ரத்துசெய்த நீதிமன்றம் | poor action by Ghaziyabad court to the person who abused a child

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (11/03/2019)

கடைசி தொடர்பு:17:55 (11/03/2019)

`5 மரக்கன்றுகளை நடணும்!'- சிறுமியை வன்கொடுமை செய்தவரின் வாரன்ட்டை ரத்துசெய்த நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நான்கு வயது சிறுமியை கடத்திக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்தவர் ராஜு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் ராஜு. வெளியேவந்த ஆறுமாதங்களாக இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

வன்புணர்வு

இந்த வாரன்ட்டை ரத்து செய்யக்கோரி கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனு கொடுத்தார் ராஜு. அதை பரிசீலித்த காசியாபாத் நீதிமன்றம் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ராஜுவுக்குப் பிறப்பித்த வாரன்ட்டை திரும்பப் பெற்றிருக்கிறது. இது இறுதியான தீர்ப்பு இல்லை எனினும், கொடுங்குற்றம் புரிந்துவிட்டு வழக்கிலும் சரியாக ஆஜராகாத ஒருவருக்கு ஒரு நீதிமன்றம் ஐந்து மரக்கன்றுகளை நடச் சொல்லி அவருடைய நிபந்தனையற்ற ஜாமீனை ரத்து செய்திருப்பது உத்தரப்பிரதேச நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


[X] Close

[X] Close