வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்குச் செல்கிறது என்பது ரகசியம்- குமரி கலெக்டர் | Kanya kumari Collector reports lok sabha election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:59 (16/03/2019)

வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்குச் செல்கிறது என்பது ரகசியம்- குமரி கலெக்டர்

``எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்குச் செல்கிறது என்பது கடைசி வரை ரகசியமாக வைக்கப்படும்'' என கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

பிரசாந்த் மு.வடநேரே

கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் 31.1.2019 வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 14,77,161 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மக்கள் தொகையில் இது 73 சதவிகிதமாகும். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்வரை விண்ணப்பங்கள் பெறப்பட1694 வாக்குச்சாவடிகள் உள்ளன. 6 சட்டசபை தொகுதிகளிலும் 18 நோடல் ஆபீஸர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 சட்டசபை தொகுதிகளும் 117 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 12 ரிசர்வ்  டீம் அமைக்கப்பட்டுள்ளன. 18 பறக்கும்படை, 18 நிலையான கண்காணிப்புப் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 8,552 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப 1923 வி.வி.பேட் உள்ளது.

பிரசாந்த் மு.வடநேரே

கூடுதலாக 150 வி.வி.பேட் வழங்கப்பட்டுள்ளன. எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்குச் செல்கிறது என்பது கடைசி வரை ரகசியமாக வைக்கப்படும். தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க 1950 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவிஜில் (cvigil) ஆப் அனைவரும் டவுன்லோட் செய்து அதன்மூலம் புகார் அனுப்பலாம். போன் நம்பர் கொடுத்தும் புகார் அனுப்பினால் புகாரின் நிலை குறித்த தகவல் வரும்.

புகார்தாரர் தன்னைப்பற்றி தகவல் தெரிவிக்க விரும்பாமல் இருந்தால் மொபைல் நம்பர் கொடுக்காமலும் புகார் அனுப்பலாம். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 48 பகுதிகளில் 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நடத்தலாம். புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படமாட்டார்கள். புதிய டெண்டர்கள் எதுவும் நடக்காது, எந்தப் பணி ஆணையும் வழங்கப்படமாட்டாது" என்றார்.


[X] Close

[X] Close